
பொதுமக்கள் அச்சமின்றி குழாய் நீரைக் குடிக்கலாம்
குரோமியம் அதிக அளவு கொண்ட நீரேற்றப்பட்ட சுண்ணாம்பு, நாட்டில் உள்ள எந்தவொரு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் விநியோகிக்கப்படவில்லை என நகர அபிவிருத்தி அமைச்சர் அனுர கருணாதிலக்கே தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட குரோமியம் அதிக அளவு கொண்ட நீரேற்றப்பட்ட சுண்ணாம்பு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக குற்றம் சுமத்தியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
குரோமியம் அதிக அளவு கொண்ட நீரேற்றப்பட்ட சுண்ணாம்பு நீரைச் சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படாததால், பொதுமக்கள் அச்சமின்றி குழாய் நீரைக் குடிக்கலாம் எனவும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.