தேசிய பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்

தேசிய பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்

”மன்னாரில் நீதிமன்றத்துக்கு வெளியில் துப்பாக்கிச்சூடு நடக்கின்றது. கொழும்பில் நீதிமன்றத்துக்கு உள்ளேயே நடக்கின்றது. நிலைமை இவ்வாறு இருந்தால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருவார்களா? எனவே, தேசிய பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.” என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (19) நடைபெற்ற பாதீடுமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ” தேசிய பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினையில்லை என அமைச்சர் ஒருவர் நேற்று (19) கூறினார். ஆனால் நேற்றிரவும், இன்றும் இரு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. நீதிமன்றத்துக்கு உள்ளேயே சென்று, நீதிபதி முன்னிலையிலேயே கொலைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு பிரச்சினை இல்லை என அரசாங்கம் ஒரு புறத்தில் கூறினாலும், மறுபுறத்தில் பட்டப்பகலில் படுகொலைகள் இடம்பெறுகின்றன.

மன்னாரில் நீதிமன்றத்துக்கு வெளியிலும், கொழும்பில் நீதிமன்றத்துக்கு உள்ளேயும் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இப்படி நடந்தால் வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவர முடியுமா? சுற்றுலாத்துறையிலும் தாக்கம் ஏற்படும். இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். முதலீட்டாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தினால்தான் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருவார்கள். ”என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)