
யாழில் 197 கிலோ கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது
யாழ்ப்பாணம் அனலைதீவுக்கு அண்மித்த கடற்பகுதியில் 197 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் மற்றும் காரைநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அனலைதீவுக்கும், எழுவைதீவுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகினை, கடல் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் கண்டு படகினை வழி மறித்து சோதனையிட்டனர்
அதன் போது படகில் இருந்து 197 கிலோ 400 கிராம் கஞ்சாவை மீட்டனர். அதனை அடுத்து படகில் இருந்த இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் , மீட்கப்பட்ட கஞ்சா மற்றும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு என்பவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிசாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka