தெலுங்கு திரையுலகில் களமிறங்கிய டேவிட் வார்னர்

தெலுங்கு திரையுலகில் களமிறங்கிய டேவிட் வார்னர்

தெலுங்கில் ராபின்குட் படத்தில் நிதின் மற்றும் ஸ்ரீ லீலா நடித்து வருகின்றனர். இந்த படத்தை வெங்கி குடுமுலா இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படம் மார்ச் 28-ந் திகதி திரையரங்குகளில் ரிலீசாகும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடித்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ரவி சங்கர் தெரிவித்துள்ளார்.

வார்னர், கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும் போது மைதானத்தில் வைத்தே புஷ்பா பட ஸ்டைலை செய்து காட்டி இந்திய ரசிகர்களை கவர்ந்தவர். இந்த நிலையில் டேவிட் வார்னர் தெலுங்கு திரைபடத்தில் நடிக்க உள்ளதாக நீண்டகாலமாக தகவல்கள் வெளியாகி வந்தன.

அதன்படி டேவிட் வார்னர் நடித்துள்ள திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கிரிக்கெட் மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைத்த வார்னர், தற்போது திரைபடங்களில் களமிறங்கி ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)