
ஏப்ரலில் இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் முதல் இரு வாரங்களுக்குள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டு டிசெம்பர் நடுப்பகுதியில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதுடெல்லிக்கான தனது இரண்டு நாள் பயணத்தின் போது, இந்திய பிரதமரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
2024 செப்டம்பரில் இலங்கை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி திஸாநாயக்கவின் முதல் வெளிநாட்டு விஜயமாக இது அமைந்திருந்தது.
முன்னதாக, 2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது 4 பில்லியன் டொலர் மதிப்புள்ள நிதியுதவியினை இந்தியா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.