மக்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கி நியாயமற்ற தொழிற்துறை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் 

மக்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கி நியாயமற்ற தொழிற்துறை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் 

மக்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கி நியாயமற்ற தொழிற்துறை  நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என ஆளும் கட்சி பிரதான அமைப்பாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ நேற்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகள் வெட்டப்படுவதனால் மார்ச் 5 ஆம் திகதியில்  இருந்து நாடு முழுவதும் வேலை நிறுத்தத்திற்கு எதிர்பார்ப்பதாக அரசாங்கத்தின் வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஊடகங்கள் கூடாக மேற்கொண்ட அறிவித்தல் தொடர்பாக நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் இதனை குறிப்பிட்டார். 

தொழிற்சங்க போராட்டம் இன்றி இந்த அரசாங்கம் சகல வைத்தியர்களுக்காகவும் வழங்கும் சம்பள அதிகரிப்பொன்று இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி அடிப்படைச் சம்பளம், விடுமுறை கொடுப்பனவு, மேலதிக கடமை கொடுப்பனவு மற்றும் வரி நிவாரணம் என்பன இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களுக்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார். அது தவிர தற்போது காணப்படும் 1630 ரூபாய் சம்பள அதிகரிப்பு 1940 வரை அதிகரிக்கப்படுவதாகவும், தற்போது காணப்படும்  2170 ரூபாய் சம்பளம் அதிகரிப்பு 3900 ரூப் வரை உயர்வதாகவும் குறிப்பிட்டார்.

6 ஆம் திகதி இடம்பெறும் சுகாதார அமைச்சின் செலவு ஒதுக்கீடு நீதான வாசிப்பின் போது இந்த தொழில்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.  
கடந்த பெப்ரவரி  17 ஆம் திகதி ஜனாதிபதி முன்வைத்த வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் இரண்டு நாட்களுக்குப் பின் பெப்ரவரி ஆறாம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஒரு தாதியர் சங்கத்தின் தலைவர் அறிவித்தலன்றை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

வைத்தியர்கள் கடந்த பொருளாதார நெருக்கடியின் போது பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து தமது சேவைகளை மேற்கொண்டதாகவும், இதனால் மேற்கொள்ளப்பட்ட பொதுமக்களின் போராட்டத்தில் இன்று காணப்படும் அரசியல் மாற்றத்தை காரணமாக எடுப்பதற்கு வைத்தியர்களின் ஒத்துழைப்பை வழங்கியதாகவும் அமைச்சர் தெளிவு படுத்தினார். 

தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்;
அரச சேவைக்குள் உள்வாங்கப்படும் வைத்தியர்களின் அடிப்படைச் சம்பளம் 54,290 ரூபாய்.  240,000 ரூபாய் அளவில் வருமானமாக கிடைக்கும்.  54,290 அடிப்படைச் சம்பளம் 94,150 ரூபாய்  வரை அதிகரிக்கும்.  39,860 ரூபாயினால் அடிப்படைச் சம்பளம் அதிகரிப்பை காட்டும். அதன் முதல் கட்டத்தின் ஏப்ரல் மாதத்தில்15,582 ரூபாவால் அதிகரிக்கப்படும்.

இரண்டாம் தரத்திலான வைத்தியர்களின் அடிப்படைச் சம்பளமானது  58,305 ரூபாய்களாகும். அது 101,370 ரூபாய் வரை அதிகரிக்கும். 43,065 ரூபாயினால் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்படும்.  முதலாம் தரத்திலான பைத்தியர்களின்  சம்பளம் 71,805 ரூபாய்களாகும். அந்தச் சம்பளம்  125,670 ரூபாய்களை அதிகரிக்கும். அது 53,865 ரூபாவினால் அதிகரிக்கும். 

விசேட வைத்திய தரத்திலான வரை மருத்துவர்களின் அடிப்படைச் சம்பளம் 88,000 ரூபாய்கள். அது 156,000 ரூபாய் வரை கூடும். 68,000 ரூபாய் அடிப்படைச் சம்பள அதிகரிப்பொன்று இடம்பெறும். எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்து 20 மாதங்களுக்குள் இந்த அதிகரிப்பு வழங்கப்படும். 

இந்த இலக்கத்தை கூறாதிருப்பதன் அடிப்படையில் பெரும்பாலான வைத்தியர்களை இடை நடுவில் அனுப்புவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள். 

வைத்தியர்களின் தரம் 1 ஆரம்ப நிலை சம்பளம்  56,960 ரூபாய் அடிப்படை சம்பளம்  98,950 வரை அதிகரிக்கும். அதில் 41,990 அதிகரிப்பு ஏற்படும். எம் ஓ தரம் ஒன்றில் ஆனவர்களுக்கு அடிப்படை சம்பளம்  63,685 ரூபாய்கள்.  அது 111,050 ரூபாய் வரை அதிகரிக்கப்படும். அது 47,365 ரூபாவினால் அதிகரிக்கும்.  எம் ஓ தரம் இரண்டு அடிப்படைச் சம்பளம் 69,635 ரூபாவான அடிப்படைச் சம்பளம் 121,770 வரை  52,135 ரூபாவினால் கூடும். எம் ஓ தரம் ஒன்றில்  80,485 அடிப்படைச் சம்பளம்  141,270 ரூபாய் வரை அதிகரித்து 60,785 ரூபாவினால் கூடும் என தொடர்ந்தும் தெளிவுபடுத்திய அமைச்சர், அது தவிர தற்போது யாராவது 309,995 ரூபா முழுச் சம்பளத்தை பெற்றால் அது 382,877 ரூபாய் வரை அதிகரிக்கும்.  350,740 ரூபா முழுச் சம்பளம் பெறுபவருக்கு அது  444,400 வரை கூடும்.  உழைப்பிற்கு வரி எமது அரசாங்கத்தினால் மாற்றப்பட்டது.

அதன்படி ஒரு இலட்சத்திலிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெற்றவர்கள்   35,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை வரி செலுத்தினார்கள். இப்போது அவர்களுக்கு  100  ரூபாய் வரி விலக்களிப்பு காணப்படும். அது இரண்டு லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெற்றவர்களுக்கு நூற்றுக்கு  72 வீத வரி விலக்காகும்.  250,000 ரூபாய் வரை சம்பளம் பெற்றவர்களுக்கு நூற்றுக்கு 62 வீத வரிவிலக்கு வழங்கப்படும். 300,000 ரூபாய் சம்பளம் பெற்றவருக்கு  47 வீர வரி நிவாரணம் கிடைக்கும்.  இதன்படி சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)