துப்பாக்கியுடன் இருவர் கைது

துப்பாக்கியுடன் இருவர் கைது

இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கியுடன் இரண்டு சந்தேகநபர்கள் விசேட பொலிஸ் குழுவினால் நேற்று (05) கைது செய்யப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கியை வைத்திருந்ததாக கூறப்படும் மஹியங்கனானை, இல. 40 இன்டஸ்ட்ரியல் கொலனியில் வசிக்கும் 61 வயதுடைய நபரும், துப்பாக்கியை தயாரித்ததாக கூறப்படும் பதியத்தலாவ பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய அவரின் அறிவுறுத்தலின் மஹியங்கனை பகுதியில் உள்ள முதலாவது சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட விசேட பொலிஸ் குழுவினர், வீட்டை அண்டிய கரச் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த துப்பாக்கியை கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​பதியத்தலாவ பிரதேசத்தில் துப்பாக்கி தயாரிக்கும் நபரிடம் இருந்து இந்த துப்பாக்கி பெறப்பட்டதாகவும், அதன் பிரகாரம், சில மணித்தியாலங்களின் பின்னர், குறித்த சந்தேக நபரையும் பொலிஸ் குழு கைதுசெய்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​தான் சில காலமாக வேட்டையாடும் துப்பாக்கிகள், போன்ற துப்பாக்கிகளை தயாரித்து வருவதாகவும், யூடியூப் சேனலில் காணொளியை பார்த்து தான் இந்த துப்பாக்கியை தயாரித்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்லவின் பணிப்புரைக்கமைய பொலிஸ் பரிசோதகர் சுதேஷ் சதுரங்க, பொலிஸ் கிராதுருகோட்டா உள்ளிட்ட குழுவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதன்படி, மஹியங்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.டபிள்யூ.எம் விஜேரத்ன தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், சந்தேகநபர்கள் இருவரும் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர் தெரிவித்தனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)