
ஐஸ்கிரீம்க்குள் உறைந்திருந்த பாம்பு
தாய்லாந்து நாட்டில் ஒருவர் தள்ளுவண்டி கடைக்காரரிடம் குச்சி ஐஸ் ஒன்றை வாங்கி, கவரை பிரித்துள்ளார். அப்போது அதில் வித்தியாசமாக ஏதோ ஒட்டியிருப்பதைக் கவனித்து உற்றுப் பார்த்தவர் அதிர்ந்து போனார். ஒரு சிறிய பாம்பு ஐஸ் கட்டியில் உறைந்து போய் இருந்தது.
நல்ல வேளை வாயில் வைத்து சுவைக்கவில்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார். பின்னர் அதை படம் பிடித்து வலைத்தளத்தில் வெளியிட்டார். அந்தப் பதிவு 9 ஆயிரத்து 100 பேரால் பகிரப்பட்டு வைரலானது.
பல ஆயிரம் பேர் கருத்து பகுதியில் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். கலவையான கருத்துகளை பதிவிட்டனர். ஐஸ்கிரீம் பிரியர்கள்தான் ஐசுக்குள் பாம்பும் இருக்குமா? என்று உறைந்து போயிருக்கிறார்கள்.
CATEGORIES World News