வெலிவேரியவில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் படுகாயம்

வெலிவேரியவில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் படுகாயம்

வெலிவேரிய அரலியகஸ்தெக சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று நேற்று (13) இரவு பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (13) இரவு ஒன்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் ஒருவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் உடுகம்பொல பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய நபரொருவர் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் வெலிவேரிய பொலிஸார் உள்ளிட்ட மூன்று விசாரணைக் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)