
வெலிகந்தை முன்னாள் OIC கைது செய்ய உத்தரவு
வெலிகந்தை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலன்னறுவை இலக்கம் 02 நீதிவான் பொலிஸாருக்கு நேற்று (18) உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெலிகந்தை பொலிஸார் இரு சந்தேக நபர்களை 20 பசுக்களுடன் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் கால்நடைகளை அரசாங்க பண்ணை ஒன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்ட போதும் கடத்தல்காரர்கள் இருவருக்கு விற்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் வெலிகந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக அநாமதேய மனுவொன்றின் மூலம் பொலன்னறுவை நீதிவானிடம் உண்மைகளை முன்வைத்ததையடுத்து, நீதிவான் இது தொடர்பில் நேரில் விசாரணை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, விசாரணைகளை பொலிஸ் மா அதிபர் மற்றும் வடமத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் நீதிவான் ஒப்படைத்துள்ளார்.