
கணவனை கொன்று உடலை மோட்டார் சைக்கிளில் கொண்டுச் சென்ற மனைவி
இந்தியாவின் ராஜஸ்தானின் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று அவரது உடலை மனைவி மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற CCTV காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஜெய்ப்பூரில் தனலால் என்பவர் தனது மனைவியின் திருமணத்திற்கு புறம்பான உறவு குறித்து கேள்வி எழுப்பித்தால் காதலனுடன் சேர்ந்து குறித்த பெண் தனது கணவனை ககொன்றுள்ளார்.
பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்து சென்று கணவரது உடலை எரித்துள்ளனர்.
மார்ச் 16 ஆம் திகதி பாதி எரிந்த நிலையில் ஒரு உடல் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதனையடுத்து தனலால் மனைவி கோபாலி தேவி மற்றும் அவரது காதலர் தீனதயாள் ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர்.