
அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற சமோத் யோதசிங்க
சீனாவின் நெஞ்சிங் நகரில் இன்று (21) ஆரம்பமான உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின், ஆண்களுக்கான 60 மீற்றர் ஓட்டப் போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு இலங்கையின் சமோத் யோதசிங்க தகுதி பெற்றுள்ளார்.
அவர் 6.70 விநாடிகளில் ஓட்டத் தூரத்தை நிறைவு செய்திருந்தார்.
இந்த போட்டியில் இரண்டாவது ஆரம்ப சுற்றில் சமோத் பங்கேற்ற நிலையில், முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்ற அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து வீரர்கள் பதிவு செய்த 6.70 என்ற நேரத்தை பதிவு செய்திருந்தமை விசேடம்சமாகும்.
இந்தப் போட்டி எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.