
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்!
25ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (பாதீடு) நேற்று மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட 2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அரசியலமைப்பின் 79 ஆவது உறுப்புரைக்கமைய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
இதற்கமைய, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமாக அமுலுக்கு வருகின்றது.
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பில் ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 45 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 114 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.