
ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2 ஆயிரம் பேர் மரணம் !
கடந்த 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு நாட்டின் நிலைமை காரணமாக கோட்டாபய அமைச்சரவையால் ஓய்வூதிய கொடுப்பன வுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
இதனால், ஓய்வூதியத்தை எதிர்பார்த்தி ருந்த 2000இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இடைநிறுத்தி வைக்கப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவுகளை
உரியவர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
பாராளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘கடந்த 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டுவரை ஓய்வு பெற்றவர்களுக்கு 2020-01-01 இல் வழங்குவதற்குரிய ஓய்வூதியமானது நாட்டின் நிலமை காரணமாக கோட்டாபய அமைச்சரவையால் தற்காலிகமாக நிறுத்தி வைக்
கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டுவரை ஓய்வு பெற்ற பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்கள் தேசிய மக்கள் சக்தியின் முதலாவது வரவு – செலவு திட்டத்தில் இதற்கு தீர்வு கிடைக்கும் என
எதிர்பார்த்திருந்தனர்.
அதாவது 2020ஆம் கிடைக்கவேண்டிய ஓய்வூதிய கொடுப்பனவு 2025ஆம் ஆண்டுவரை, ஐந்தாண்டுகளாக பெறமுடியாது காத்திருந்தவர்களுக்கு தற்போது வரவு – செலவு திட்டத்தில் அந்தக் கொடுப்பனவு மூன்று கட்டங்களாக 2027வரை வழங்க காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளளது.
இக்கொடுப்பனவு பெறவேண்டிய 2000 பேரளவிலான ஓய்வூதியர்கள் இறந்துவிட்டனர்.
இந்நிலையில் தற்போதைய அரசும் ஓய்வூதியர் வாழ்வுக் காலம் பற்றி சிந்திக்காது, குறித்த ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவதை மேலும் மூன்றாண்டுகளுக்கு பிற்போட்டுள்ளதென கவலையடைகின்றனர்
மக்களுக்கான அரச பணியை பண்பாக செய்து,இன்று ஓய்வில் இருக்கும் சேவையாளர்களை நிம்மதியாக ஓய்வு காலத்தை கழிப்பதற்கு உதவி செய்யுங்கள்’ என பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்