மாத்தறையில் துப்பாக்கிச் சூடு : இருவர் பலி

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு : இருவர் பலி

மாத்தறை – தெவுந்தர சிறிவிஷ்ணு கோவிலுக்கு தெற்கு வாஹல்கடவிற்கு முன்பாக உள்ள சிங்காசன வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 11:45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள், தங்கள் நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள தெவுந்தர கபுகம்புர பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்று, அதன் பின்னர் தங்கள் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, பின்னால் வந்த வேன் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதிய பின்னர் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிக்காரர்கள் வந்ததாக சந்தேகிக்கப்படும் வேன், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிளை வீதியில் எரிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

அதிலிருந்து, T-56 ஆயுதத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு மெகசின் மற்றும்T-56 வெற்று​ தோட்டாக்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டில் தெவிநுவர சிங்காசன வீதியை சேர்ந்த யோமேஷ் நதிஷான் மற்றும் பசிந்து தாருக என்ற இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)