
இராணுவ புலனாய்வு படையணியின் புதிய படைத் தளபதி கடமை பொறுப்பேற்பு
இராணுவ புலனாய்வு படையணியின் புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் W.M.P.M விஜேசூரிய அவர்கள் 2025 மார்ச் 20 ஆம் திகதி கரந்தெனிய படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய பதவியேற்றார்.
இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய, நியமிக்கப்பட்ட புதிய படையணியின் படைத் தளபதி பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அன்றைய நிகழ்வுகளில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர். மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் தற்போது கிளிநொச்சி முதலாம் படையின் தளபதியாக பணியாற்றி வருகின்றார்.
CATEGORIES Sri Lanka