
வௌ்ளவத்தை மற்றும் கல்கிஸை கடற்பகுதிகளில் மீண்டும் முதலைகளின் அச்சுறுத்தல்
வௌ்ளவத்தை, கல்கிஸை மற்றும் பாணந்துறை கடற்பகுதிகளில் மீண்டும் முதலைகளின் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் எச்சரிக்கையாக செயற்படுமாறு இலங்கை உயிர் காப்பு சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கல்கிஸை கடற்கரைக்கு அருகிலுள்ள கடல்களில் முதலைகள் அதிகரித்து வருவதாக குறித்த சங்கம் தெரிவத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை உயிர் காப்பு சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.
CATEGORIES Uncategorized