ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பான குழு ஏப்ரல் 21 க்கு முன்னர் வௌிப்படுத்தப்படும்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு பொறுப்பான குழுவை எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் அம்பலப்படுத்துவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
தெய்யந்தர பகுதியில் தற்போது நடைபெற்று வரும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

