அரச சேவைக்கான சம்பள திருத்தம்

அரச சேவைக்கான சம்பள திருத்தம்

2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச சேவையின் சம்பளத்தைத் திருத்தம் செய்வதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையின் அடிப்படையில் 2025.04.01 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தப்பட்ட சம்பள அளவுத்திட்டத்திற்கமைய சம்பளக் கொடுப்பனவுக்கான ஏற்பாடுகள் உள்ளடங்கிய சுற்றறிக்கையின் மூலமான ஆலோசனைகளை வெளியிடுவதற்கு அமைச்சரவை கீழ்;க்காணும் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.

  • அரச சேவையின் சம்பளத் திருத்திற்கு ஏற்புடைய அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலமான ஆலோசனை வழங்குவதற்காக பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் வழங்கல்
  • அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் மற்றும் அரசிற்கு சொந்தமான கம்பனிகள் மற்றும் ஏற்புடைய நிறுவனங்களுக்கான சுற்றறிக்கை ஆலோசனையை வழங்குவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் வழங்கல்.

24 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவையில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்களும் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்களும் சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு தீர்மானங்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )