
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பாலைவனக் கீரிகள்
தேசிய விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் பெப்ரவரி 10ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள கெப்பிடல் மிருகக்காட்சிசாலையில் இருந்து தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு வரப்பட்ட 6 பாலைவனக் கீரிகள் (meerkat), கால்நடை வைத்தியர்களின் மேற்பார்வையின் கீழ் ஒரு மாதத்திற்கும் மேலாக மிருகக்காட்சிசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு, நேற்று (26) பொது காட்சிக்கு விடுவிக்கப்பட்டது.
இந்த ஜோடிகளும் தற்போது 2 முதல் 6 வயதுக்குட்பட்டவை என்றும், அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை வாழ்பவை என்றும், ஆபிரிக்காவின் புல்வெளிகள் மற்றும் காடுகள் மற்றும் உலகின் மலைகளில் பெரும்பாலும் வாழும் ஒரு வகை விலங்கு என்றும் தெரிவிக்கப்படுகிறது



CATEGORIES Sri Lanka