
மியாமி ஓபன் டென்னிஸ் ; ஜெசிகா பெகுலா அரையிறுதிக்கு முன்னேற்றம்
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, இங்கிலாந்தின் எம்மா ராடுகானு உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் இரு செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை பெகுலா கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த ஆட்டத்தில் 6-4, 6-7 மற்றும் 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற பெகுலா அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
இவர் அரையிறுதியில் அலெக்ஸாண்ட்ரா ஈலா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
CATEGORIES Sports News