
சாமர சம்பத்திற்கு பிணை
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவரை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகியிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

