
மின்சாரம் மற்றும் டீசல் மாபியாவில் அரசாங்கம் சிக்கியுள்ளது
தற்போது மின்சார மாபியா நாட்டையே ஆட்கொண்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நாட்டிற்கும், நுகர்வோருக்கும், சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும்.
என்றாலும், நமது நாட்டிலிருந்து சூரிய சக்தியை ஒழிக்கத் தேவையான அனைத்து திட்டங்களையும் வகுத்து தயார் நிலையில் வைத்துள்ளனர். மேற்கூரை சூரிய மின்சக்திக்கான கட்டண விகிதம் குறைக்கப்பட்டு, டீசல் மாபியாவுக்கும், எரிபொருள் மாபியாவுக்கும் இடமளித்துள்ளனர்.
இந்த மாபியாவுக்கு இடமளிக்க முடியாது. சூரிய ஆற்றல், காற்றாலை மற்றும் நீர் மின்சாரம் இன்னும் அதிகமாக இயக்கப்பட வேண்டும்.
தேர்தல் காலத்தில் அரசாங்கம் என்னதான் பேசினாலும், இன்று டீசல் எரிசக்தி மாபியாக்களினது அடிமைகளாக மாறியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.