
பெட்ரோல் குண்டு வீச்சில் சிறுமி ஒருவர் பலி
வீட்டின் மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு தாக்குதலில் காயமடைந்த 05 வயதுடைய குழந்தை நேற்று (30) உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை, ராஜாவத்த, கமகொட வீதியில் வசித்து வந்த செனல் சந்தீப என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
கடந்த 29 ஆம் திகதி இரவு 8.50 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் பலத்த தீக்காயங்களுக்கு ஆளான குழந்தை, களுத்துறையில் உள்ள நாகொட போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் பொரளை லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை உயிரிழந்தது.
CATEGORIES Sri Lanka