
யாழ்.மத்திய பஸ் நிலையத்தை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் இளங்குமரன்
க்ளீன் ஶ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தை அழகுபடுத்தும் நடவடிக்கை நேற்று (30) முன்னெடுக்கப்பட்டது.
அதன்போது, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், இராணுவத்தினர், பொலிஸார், இலங்கை போக்குவரத்து சபையினர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இனிவரும் காலத்தில் பஸ் நிலையத்தில் விளம்பரங்களை ஒட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.


CATEGORIES Sri Lanka