
முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து ; இருவர் காயம்
பசறை டெமேரியா வீதியில் இன்று (2) பகல் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
32 மற்றும் 44 வயதுடைய டெமேரியா மீரியபெத்த பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை பக்கம் இருந்து டெமேரியா நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியும்டெமேயியா மீரியபெத்த பக்கம் இருந்து பசறை நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுமே இவ்வாறு விபத்துக்குள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் சாரதி பலத்த காயமடைந்த நிலையில் பசறை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காயமடைந்த மற்ற நபர் பசறை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் விபத்து தொடர்பாக விசாரணைகளை பசறை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.