சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறிய வைத்தியர்!

சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறிய வைத்தியர்!

நீர்க்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்த இளம் பெண்ணொருவர், அங்குள்ள வைத்தியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

பாதிக்கப்பட்ட இளம் பெண், சிகிச்சை பெறுவதற்காக வந்தபோது, சம்பந்தப்பட்ட வைத்தியர் பாலியல் துன்புறுத்தலை மேற்கொண்டதாக அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சுமத்தப்பட்ட வைத்தியர் தமது சங்கத்தின் உறுப்பினராக இருந்து நீக்கப்பட்டவர் என இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளரான வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு, உடனடியாக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

“இது தொடர்பாக நீர்க்கொழும்பு வைத்தியசாலையிலிருந்து அறிக்கை ஒன்று கோரப்பட்டது. அதில் தெளிவாகிய ஒரு விடயம், குறித்த வைத்தியர் இதற்கு முன்னரும் அரச வைத்திய அதிகாரிகளின் சாசனத்தை மீறியவராவார்.

அவர் ஒழுக்கமின்மையாக செயல்பட்டதால், 2021 ஆம் ஆண்டு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்.

இந்த சம்பவத்தை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இது தொடர்பாக நியாயமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை நடைபெற வேண்டும்.

எந்தவிதத்திலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றவாளிகளை பாதுகாக்க தயாராக இல்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம்” என்று அவர் கூறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus (0 )