கொழும்பில் இந்தியப் பிரதமருக்காக திரையிடப்பட்ட சுந்தரகாண்ட நாடகம்

கொழும்பில் இந்தியப் பிரதமருக்காக திரையிடப்பட்ட சுந்தரகாண்ட நாடகம்

இலங்கைக்கு வருகைத்தந்துள்ள இந்தியப் பிரதமருக்கு, இராமாயண இலக்கியத்தின் சுந்தர காண்டத்தில் உள்ள சில பகுதிகளை எடுத்துக்காட்டும் ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சி நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி,

‘சுந்தர காண்டத்தின் சில பகுதிகளை எடுத்துக்காட்டும் ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சியின் காட்சிகளை கண்டுகளித்தேன்.

இதனை ஏற்பாடு செய்த பொம்மலாட்ட சங்கத்தினருக்கும், அவர்களின் ஆர்வத்திற்கும் வீரியத்திற்கும் எனது பாராட்டுகள்.

அவர்களின் அரவணைப்பு மற்றும் உற்சாகத்தால் நான் மிகவும் நெகிழ்ச்சியடைந்தேன் அவர்களுக்கும் நன்றி” என கூறியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )