
நுவரெலியா அரச பஸ் எஞ்சினில் யூரியாவை கொட்டியது யார் ?விசாரணைகள் ஆரம்பம்
நுவரெலியா டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸின் எஞ்சினில் யூரியா உரத்தை கொட்டிய விடயம் தொடர்பில் நுவரெலியா ஹை போரொஸ்ட் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
நுவரெலியாவிலிருந்து ஹை போரொஸ்ட் பகுதிக்கு சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ்ஸில், யூரியா உரம் கொட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸில் 12 ஆம் திகதி இவ்வாறு எஞ்சினில் யூரியா உரம் காட்டப்பட்டுள்ளது.
காலையில் பஸ் இயக்கப்படுவதற்கு முன்பு, எஞ்சினில் எரிபொருளை சரிபார்க்க மூடியைத் திறந்தபோது இயந்திர மூடி அகற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.
மேலும், யூரியா உரத்தைப் போன்ற ஒரு வெள்ளை இரசாயனப் பொருள் அருகிலுள்ள இயந்திரத்தைச் சுற்றி இருப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சந்தேகமடைந்த பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் போலீசாரிடம் முறைபாடளித்தனர்.
இதனடிப்படையில் பஸ்ஸை பார்வையிட்ட பொலிஸார் , பஸ் எஞ்சினில் நபரால் அல்லது குழுவினரால் யூரியா உரம் கொட்டப்பட்டுள்ளதாக தெரிவித்ததோடு குறித்த பஸ்ஸை இயக்காமல் எஞ்சினை அகற்றி ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

