
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இவ்வாறு மழை பெய்யக்கூடும்.
அத்துடன் தென் மாகாணத்திலும் மொனராகலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் பலத்த காற்றும் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.