
ஏப்ரல் 21 வரை சூரிய சக்தி மின் படலங்களை அணைக்குமாறு கோரிக்கை .
தேசிய மின் கட்டமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை கருத்திற்கொண்டு ,சூரிய மின் படலங்கலளின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்ககும் பொருட்டு, 21 திகதி வரை தினமும் காலை முதல் பிற்பகல் 3.00 மணிவரை சூரிய சக்தி படலங்களை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அதன் உரிமையாளர்களை இலங்கை மின்சார சபை கோரியுள்ளது.
புத்தாண்டுக் காலத்தில் நீண்ட விடுமுறை காரணமாக மின்சாரத் பயன்பாடு குறைந்துள்ளமை மற்றும் அதிகரித்த வெப்பம் காரணமாக அதிகளவிலான சூரிய சகதி உற்பத்தி போன்வற்றின் காரணமாக , தேசிய மின் கட்டமைப்பில் அசாதாரண அழுத்தம் ஏற்பட்டுள்ளதால், இந்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது .
இந்த அசாதாரண நிலை காரணமாக ஏற்படும் மிகச் சிறிய ஏற்ற இறக்க நிலையும் கூட, பகுதியளவு அல்லது நாடு முழுவதும் மின்தடை ஏற்படக் கூடிய நிலையை எட்டக்கூடும் என்றும் மின்சார சபை தனது அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் தமது கூரைகளில் பொருத்தப்பட்டிருக்கும்
சூரிய சகதி மின் படலங்களை குறித்த காலப்பகுதியில் தற்காலிகமாக அணைக்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது .
……………….
நொச்சியாகம யாய 17 பகுதியில் தந்தையும் மகனும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரட்டைக் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை நடந்த இடத்தை பொலிஸ் மோப்ப நாய்களைப் பயன்படுத்தி சோதனை செய்து கொண்டிருந்தபோது, பொலிஸ் மோப்ப நாய்கள் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களின் வீட்டை நோக்கி ஓடியுள்ளது.
முன்பு இடம்பெற்ற கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலையை மேற்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொலை செய்யப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களின் தந்தையைக் கொன்றுள்ளதாகவும், இது அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராஜாங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
………….
நொச்சியாகம யாய 17 பகுதியில் தந்தையும் மகனும் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரட்டை கொலையில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை நடந்த இடத்தை பொலிஸ் நாய்களை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, குறித்த பொலிஸ் நாய் சந்தேக நபர்களின் வீட்டை நோக்கி ஓடியுள்ளது.
முந்தைய கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட இருவர் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களின் தந்தையைக் கொன்று, பழிவாங்கும் நோக்கில் இது நடந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராஜாங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.