
விசேட போக்குவரத்து சேவை தொடர்பான தகவல்களுக்கு HOTLINE க்கு அழையுங்கள்
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு திரும்பும் பயணிகள் 1955 என்ற ஹாட்லைன் இலக்கத்திற்கும்
0712 595 555 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கும் தொடர்பு கொண்டு விசேட போக்குவரத்து சேவைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
போக்குவரத்துச் சபைக்கு 1958 என்ற இலக்கத்திற்கும் , ரயில் தொடர்பான விசாரணைகளுக்கு 1971 என்ற இலக்கத்திற்கும் அழைப்பதன் மூலமும் மேலதிகத் தகவல்களைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு திரும்பும் மக்களுக்காக
ஏப்ரல் 9ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ரயில்வே திணைக்களமும் இலங்கை போக்குவரத்து சபையும் இணைந்து விசேட கூட்டுப் போக்குவரத்து திட்டத்தை தயாரித்துள்ளன.
இந்த காலப்பகுதியில் 24 மணிநேரமும் செயற்படக்கூடிய செயற்பாட்டு அறை மற்றும் வாடிக்கையாளர் பராமரிப்புப் பிரிவொன்றை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஸ்தாபித்துள்ளது.
சுமார் 90% மக்கள் ஏற்கனவே கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்கு சென்றுவிட்டதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொழும்பு மத்திய பஸ் நிலையம் மற்றும் பெஸ்டியன் மாவத்தையில் உள்ள பிரதான பஸ் நிலையங்களிலிருந்தும் , மாகும்புர கடவத்தை அதிவேக நெடுஞ்சாலையின் பிரதான பஸ் நிலையங்களிலிருந்தும் விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மாத்தறை, காலி, அனுராதபுரம், பொலன்னறுவை, கண்டி, நுவரெலியா, பதுளை, ஹட்டன், மொனராகலை, அம்பாறை, எம்பிலிப்பிட்டிய ஆகிய பிரதான நகரங்களுக்கு மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது
இதேவேளை அதிவேக நெடுஞ்சாலை ஊடாக காலி, மாத்தறை, பதுளை, தங்காலை, கதிர்காமம், , மொனராகலை, அம்பாறை, எம்பிலிப்பிட்டிய ஆகிய பகுதிகளுக்கும் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, பதுளை, பெலியத்த, அனுராதபுரம், காலி மற்றும் காங்கேசன்துறை ஆகிய பகுதிகளுக்கு 40 மேலதிக புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.