
ஆதாரங்களுடன் நிரூபித்தால் பதவி விலகுவேன்
தற்போது நடைபெறும் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியின் வீரர்கள் இரவு விடுதிகளில் நேரத்தைச் செலவிட்டதாக எவரேனும் கூறினால் அதனை நிரூபிக்குமாறு சவால் விடுப்பதாக, விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் அமெரிக்காவில் இரவு விடுதிகளில் நேரத்தை செலவிட்டதன் காரணமாகவே, அவர்களால் போட்டிகளில் கவனம் செலுத்த முடியாமல் போனதாக சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இவ்வாறான ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை அவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மாறாக அவை உண்மை என்றால், அவற்றை ஆதாரங்களுடன் நிரூபித்தால் பொறுப்பு கூற வேண்டிய அமைச்சர் என்ற ரீதியில் நான் பதவி விலகுவேன் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
CATEGORIES Sri Lanka