
நச்சுப் போதைப் பொருளை இல்லாதொழிக்கும் தேசிய திட்டம் நுவரெலியா மாவட்டத்தில் ஆரம்பம்
‘நச்சுப் போதைப் பொருளை இல்லாதொழிக்கும், முழு நாடும் ஒன்றாக’ தேசிய திட்டத்தின் நுவரெலியா மாவட்ட நிகழ்வு நாளை (11) நுவரெலியா கிரகோரி மைதான வளாகத்தில்; ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, ‘நச்சுப் போதைப் பொருளை இல்லாதொழிக்கும், முழு நாடும் ஒன்றாக’ தேசிய திட்டம் குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பிரச்சாரம் நேற்று (09) நுவரெலியா நகரில் மகா சங்கத்தினரின் ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் ஆரம்பமாகியது.
நுவரெலியா மாவட்ட ஊடகப் பிரிவு

