
யாழில் கசிப்பு வியாபாரம் ; இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக சூட்சுமமான முறையில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் மற்றும் ஆண் என இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் போதைத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சந்தேக நபர்களிடமிருந்து 20 போத்தல்கள் கசிப்பு கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த இவர்கள், அப்பகுதியில் நீண்டகாலமாக இந்த சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதீபன்
CATEGORIES Sri Lanka

