
கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வி
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிமுதல் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு தொகுதிகளில் எதிர்பாராத திருப்பங்கள் பதிவாகி வருகின்றன.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போதைய நிலவரப்படி,
தமிழக வெற்றி கழகம் (தவெக) 110 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. திமுக 65 தொகுதிகளிலும், அதிமுக 59 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தோல்வியை சந்தித்துள்ளார். இந்த தொகுதியில் அவர் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்திலிருந்தே பின்னடைவை சந்தித்தார்.
இறுதி முடிவுகளின்படி, மு.க. ஸ்டாலின் 67,530 வாக்குகள் பெற்றுள்ளதுடன், 4,718 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு 72,248 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் நடந்த முதல் சட்டசபைத் தேர்தலிலேயே மு.க. ஸ்டாலின் தோல்வியை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுக தலைமையை ஏற்ற அவர் இதுவரை பல தேர்தல்களில் வெற்றி பெற்று வந்த நிலையில், இது முதல் தோல்வியாகும்.

