
பொலிஸ் அதிரடிச் சோதனை ; ஒரே நாளில் 548 பேர் கைது
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று (03) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 548 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், 26,346 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், 147 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 212 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 158 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
CATEGORIES Sri Lanka

