
மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை விஜய் ஏற்படுத்துவார்-எஸ்.ஏ.சந்திரசேகர் நம்பிக்கை
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்றும், அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்றும் அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2026-ம் ஆண்டு தமிழக அரசியலில் மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை விஜய் நிச்சயம் கொண்டு வருவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 30 வருடங்களாக தமிழ் சமூகத்துக்கும் மக்களுக்கும் ஏதாவது செய்யவேண்டும் என விஜய் நினைத்துக்கொண்டிருந்தார்.
அதனால் படிப்படியாக அவர் இத்தகைய முன்னெடுப்புக்களை செயல்படுத்தி வந்தார்.
தடைகளைத் தாண்டி சாதாரணத் தொண்டனாக விஜய் களத்தில் இறங்கி உழைத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
CATEGORIES India

