3 ஆஸ்கார் விருதுகள் கைப்பற்றிய FRANKENSTEIN திரைப்படம்

3 ஆஸ்கார் விருதுகள் கைப்பற்றிய FRANKENSTEIN திரைப்படம்

திரையுலகில் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஆஸ்கார் அகாடமி விருதுகளின் 98வது விழா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது.

மார்ச் 16ஆம் திகதி நடைபெறும் இந்த விருது விழா உலகம் முழுவதும் திரையுலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், Frankenstein திரைப்படம் மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்று பெரும் கவனம் பெற்றுள்ளது.

தயாரிப்பு வடிவமைப்பு, ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம், ஆடை வடிவமைப்பு ஆகிய பிரிவுகளில் இந்த திரைப்படம் விருதுகளை கைப்பற்றியுள்ளது.

திரைப்பட வரலாற்றில் காலத்தைக் கடந்து நிலைத்து நிற்கும் படங்களில் ஒன்றாக Frankenstein கருதப்படுகிறது.

விஞ்ஞானத்தின் எல்லைகளை மீறி, மனிதன் உயிரற்ற உடல் பகுதிகளை ஒன்றிணைத்து புதிய உயிரை உருவாக்க முயற்சிக்கும் ஆபத்தான ஆசையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதன் தனித்துவமான கதை மற்றும் காட்சியமைப்புகள் காரணமாக, Frankenstein திரைப்படம் உலகம் முழுவதும் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )