
பாரியளவு போதைப்பொருளுடன் இருவர் கைது
கொட்டதெனிய பகுதியில் ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொட்டதெனிய ஹப்புவலன பகுதியில் நேற்று (15) இரவு நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 225 கிராம் ஹெராயின் மற்றும் 165 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் ஹப்புவலன பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவரெனவும், சம்பவம் தொடர்பில் கொட்டதெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அஹுங்கல்லே கமகரன வட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனை நடவடிக்கையில் 261 கிராம் 620 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 22 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

