
சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (03) முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போது சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 60 லீற்றர் (80 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் 47 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனுராகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையில், 101 லீற்றர் 250 மில்லிலீற்றர் (135 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் 26 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொடிவீகும்பூர பகுதியில் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 108 லீற்றர் 750 மில்லிலீற்றர் (145 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் 46 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

