
உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களின் பின்னணியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளில் குறிப்பிடத்தக்க உயர்வு பதிவாகியுள்ளது.
சந்தைத் தகவல்களின் அடிப்படையில், WTI (West Texas Intermediate) வகை மசகு எண்ணெயின் ஒரு பீப்பாயின் விலை 100.7 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
அதேவேளை, சர்வதேச சந்தையில் பரவலாக பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) வகை மசகு எண்ணெயின் ஒரு பீப்பாயின் விலை 108.1 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இயற்கை எரிவாயு விலையும் உயர்வை கண்டுள்ளது. அதன் தற்போதைய விலை 2.768 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக சந்தை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உலக அரசியல் சூழ்நிலையின் தாக்கம் காரணமாக எரிசக்தி விலைகளில் மேலும் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

