
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் 4,000ற்கும் அதிகமான அதிபர் வெற்றிடங்கள் – போட்டிப் பரீட்சை விரைவில்
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் 4,000ற்கும் அதிகமான அதிபர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தகுதியான நபர்களை தாமதமின்றி ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அதிபர் ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சை சில தொழில்நுட்பக் காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை விரைவில் நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

