
காய்ச்சல் பரவலால் தெனியாய கல்வி வலயத்தில் மேலும் 2 தினங்களுக்கு 4 பாடசாலைகள் மூடப்படுகின்றன
தெனியாய கல்வி வலயத்தில் காய்ச்சல் பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ,
தெனியாய மத்திய மகா வித்தியாலயம்
தெனியாய ராஜபக்ச மகா வித்தியாலயம்
தெனியாய புனித மத்தியூஸ் இருமொழி வித்தியாலயம்
பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகிய 4 பாடசாலைகள் மேலும் 2 நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக.மே 11 (திங்கட்கிழமை) மற்றும் மே 12 (செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்களில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய, தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா ஹெட்டிகொட மற்றும் தென் மாகாண கல்விச் செயலாளர் என்.கே.ஆர். பத்திரண ஆகியோரால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இப்பாசசாலைகள் கடந்த மே 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் மூடப்பட்டிருந்தன. எனினும், நோய்த்தொற்று இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வராத காரணத்தினால் இந்த விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.

