காலியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் உயிரிழப்பு

காலியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் உயிரிழப்பு

காலி தங்கெதர, டிக்சன் சந்திப் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.

பொலிஸார் தெரிவித்ததாவது, இன்று காலை சுமார் 7.30 மணியளவில் கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவத்தில் கடுமையாக காயமடைந்த நபர் உடனடியாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )