
மேலும் ஐந்து தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் 22 அரசியல் கட்சி ஆதரவாளர்கள் கைது
மேலும் ஐந்து தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் 22 அரசியல் கட்சி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை தேர்தல் சட்டங்களை மீறுவது உள்ளிட்ட புகார்கள் தொடர்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் ஐந்து வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தேர்தல் தொடர்பான 08 குற்றவியல் முறைபாடுகளும் ,
தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பான 27 முறைபாடுகளும்
கிடை க்கப்பெற்றுள்ளன .
இதனடிப்படையில் , உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இதுவரை
43 வேட்பாளர்கள் உட்பட 233 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் இதுவரை கிடைக்கப்பெற்ற தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 524 ஆக அதிகரித்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka

