
சீரற்ற வானிலை ; கொட்டாஞ்சேனை ஆமர் வீதி வெள்ளத்தில் மூழ்கியது
கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் அமைந்துள்ள ஆமர் வீதி, தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அந்த வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியான மழை காரணமாக வீதியில் நீர் தேங்கியுள்ளதுடன், வாகனங்கள் மெதுவாக நகரும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்தப் பகுதியை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அவதானத்துடன் பயணிக்குமாறும், இயன்றவரை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

