இன்று சீனா செல்லும் டிரம்ப்

இன்று சீனா செல்லும் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று (13) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா செல்லவுள்ளவுள்ளார்.

சுமார் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு ஒரு அமெரிக்க அதிபர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்று வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவித்தன.

உலகின் இரு மிகப்பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான உறவுகளில் இது ஒரு முக்கியமான தருணம் என்று வெளிநாட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.

அக்டோபர் 2025-ல் தென் கொரியாவின் பூசானில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் சந்தித்த பிறகு, டொனால்ட் டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

ஜனவரி 20, 2025 அன்று இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவிக்காலத்தைத் தொடங்கிய பிறகு, டிரம்ப் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமும் இதுவே ஆகும்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் மற்றும் உலகளாவிய எண்ணெய் சந்தை பிரச்சினைகள் குறித்து இங்கு விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )