மல்வானையில் உள்ள பசில் ராஜபக்சவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் காணியை பல்கலைக்கழக மாணவர்கள் ஆக்ரமிப்பு

மல்வானையில் உள்ள பசில் ராஜபக்சவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் காணியை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF) உறுப்பினர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மல்வானையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய காணியை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF) உறுப்பினர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்தக் காணி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாணவர்கள் அங்கு நிலைகொண்டுள்ளனர்.

குறித்த காணி முன்னர் “உரிமையாளர் அற்றது” என வர்ணிக்கப்பட்டு, பின்னர் அரசால் பொறுப்பேற்கப்பட்டது என மாணவர் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழகங்கள் கடும் இடநெருக்கடி மற்றும் உட்கட்டமைப்பு வசதிக் குறைபாடுகளை எதிர்கொண்டுவருகின்றது.

இந்நிலையில் இவ்வாறான பெறுமதியான அரச காணிகளை அவற்றுக்கு ஒதுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊழல் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை மீட்டு மக்களிடம் ஒப்படைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இதுவரை அர்த்தமுள்ள எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதிகாரிகளிடமிருந்து முறையான பதில் கிடைக்கும் வரை குறித்த சொத்தை ஆக்கிரமிக்கும் “நேரடிப் போராட்டத்தை” ஆரம்பித்துள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மாணவர்களின் இந்தப் போராட்டத்தின் போது அவ்விடத்தில் பொலிஸார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )