நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ.க்கு அதிக மழை

நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ.க்கு அதிக மழை

இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி தொடர்ந்தும் நீடிக்கிறது.

இந்த நிலை அடுத்த 36 மணி நேரத்தில் இலங்கையை விட்டு விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேல் , சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல் , சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 150 மி.மீ. அளவிலான மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

பிற்பகல் 1.00 மணிக்கு மேல் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )